Site icon Tamil News

சிறிய மீன்களை உட்கொள்வதால் புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கலாம் : ஆய்வில் வெளியான தகவல்!

மீன்களை சாப்பிடுவதால் புற்றுநோய் தொடர்பான ஆபத்துக்கள் கணிசமாக குறைவடைவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள நகோயா யுனிவர்சிட்டி கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நடத்திய சமீபத்திய ஆய்வில்  இந்த விடயம் தெரியவந்துள்ளது.

35 தொடக்கம் 65 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் இது தொடர்பான ஆய்வில் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய ஜப்பானிய உணவில் பெரும்பாலும் வெள்ளை பைட் மற்றும் மத்தி போன்ற சிறிய மீன்கள் உள்ளன.

அத்துடன் ஜப்பானில், கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை மிகுதியாக வழங்கும் தலை மற்றும் உள் உறுப்புகள் உட்பட முழு மீனையும் உட்கொள்வது வழக்கம்.

இவ்வாறாக முழு மீனையும் சாப்பிடும்போது ஆயுட் காலம் அதிகரிப்பதுடன், புற்றுநோயின் ஆபத்தை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறிய மீன்களை தவறாமல் உட்கொள்ளும் பெண்களிடையே புற்றுநோய் தொடர்பான இறப்புகள் மற்றும் ஒட்டுமொத்த இறப்புகளில் குறிப்பிடத்தக்க குறைவு கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version