Tamil News

ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாபய ராஜபக்சவின் விசேட அறிக்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் எழுப்பிய குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் பேராயர் தம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை நான் திட்டவட்டமாக மறுப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தை மேற்கோள் காட்டி, அந்த அறிக்கையின் மீது (, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை) நடவடிக்கை எடுக்க முடியாது என தமக்கு அறிவித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள முழுமையான அறிக்கை வருமாறு

Exit mobile version