Site icon Tamil News

தைவான் உலுக்கிய நிலநடுக்கம் – மீட்புப் பணிகள் தீவிரம் – இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்கள்

தைவானை உலுக்கிய நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் சுமார் 9 பேர் மாண்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

25 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அது என்று தைவானின் நிலநடுக்கக் கண்காணிப்பு அமைப்பு சொன்னது.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வில்லியன் லாய் (William Lai) நிலநடுக்கம் ஏற்பட்ட மையப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.

அங்கு இரவுமுழுதும் பணிபுரிந்துகொண்டிருக்கும் மீட்புக் குழுவை அவர் சந்தித்துப் பேசினார்.

87,000துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஹுவாலியென் (Hualien) மலைப்பகுதியில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட 120 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அவர்களில் சுமார் 80 பேர் சுரங்கப்பாதைகளில் அகப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Exit mobile version