Site icon Tamil News

சீன சுவாச நோய் இலங்கையில் பதிவாகியதாக சந்தேகம்?

இலங்கை முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களானது பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பேராசிரியர் சந்தன ஜீவாந்த இதனை தெரிவித்துள்ளார்.

இது சீனாவில் இருந்து பதிவாகும் சளியின் கலவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சீனாவில் பரவிவரும் நிமோனியா நிலைமை இந்நாட்டிலும் பரவுமானால், அதனைக் கண்டறியும் ஆய்வகங்கள் நாட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வைரஸ் தொடர்பில் இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என சந்தன ஜீவந்த கூறுகிறார்.

சீனாவில் கடந்த 21ஆம் திகதி கண்டறியப்படாத நிமோனியா பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும், குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நோய் பெரும்பாலும் குழந்தைகளிடையே பரவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பரவிவரும் புதிய நோய் குறித்து சரியான தகவல்களை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீன அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version