Site icon Tamil News

நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்ட டூம்ஸ்டே கடிகாரம் : அழிவின் விளிம்பில் இருக்கும் மனித குலம்!

டூம்ஸ்டே கடிகாரம் கடந்த 03 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இது மனித குலம் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறியை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

போரினால்  பெருகிவரும் ஆபத்துகள் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த கடிகாரத்தில்  வெறும் 90 வினாடிகள்  வரை  புதுப்பிக்கப்பட்டுள்ளன.

2020 முதல்,  கோவிட் -19 தொற்றுநோய்க்கான முதல் ஆண்டு, உக்ரைன் –  ரஷ்ய போர், இஸ்ரேல் – காசா போர் ஆகியவை உலகை ஆபத்தில் தள்ளியது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள கெல்லர் மையத்தில் வைத்து கடிகாரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மனிதனால் உருவாக்கப்பட்ட உலகளாவிய பேரழிவின் உடனடி அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழிமுறையாக 1947 இல் அணு விஞ்ஞானிகளால் டூம்ஸ்டே கடிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகத் தலைவர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களைக் கொண்ட லாப நோக்கமற்ற ஊடக அமைப்பு, கடிகாரத்தை ஒரு உருவகமாகவும், “பூமியில் நாம் வாழ வேண்டுமானால் நாம் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துக்களை” நினைவூட்டுவதாகவும் பயன்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version