Site icon Tamil News

கார்த்திக் போட்ட வழக்கு… சுசித்ராவுக்கு நீதிமன்றம் அதிரடி தடை உத்தரவு….

சுசி லீக்ஸ் மூலம் திரையுலகில் பிரளயத்தை ஏற்படுத்திய சுசித்ரா, மீண்டும் சமூக வலைத்தளத்தில் அடுக்கடுக்காக பல விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக கார்த்திக் குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில், நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது கார்த்திக் குமார், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் சுசித்ரா மீது மானநஷ்ட வழக்கு தொடுத்த கார்த்திக் குமார், சுசித்ரா தரப்பில் இருந்து தனக்கு ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் தன்னை பற்றியும் தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் சுசித்ரா அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கார்த்திக் குமார் பற்றி பேசுவதற்கு சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளதோடு, ஜூலை ஒன்றாம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version