Site icon Tamil News

இ-சிகரெட் தொழிற்சாலையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் : பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் தொழிலாளர்கள்!

இ-சிகரெட் தொழிற்சாலையில் பணிப்புரியும் தொழிலாளர்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு 10,000 vapes வரை” சோதனை செய்யும் தொழிற்சாலை ஊழியர்கள் அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதை குறித்த ஆவணப்படம் காட்டுகிறது.

பெருமளவில் vapes உற்பத்தி செய்யும் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த Youtubers க்கு அதன் கதவுகளை திறந்துவிட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் இ-சிகரெட்டுக்களை எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர், அதனை எவ்வாறு சோதனை செய்கின்றனர் என்பதை காண்பித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சிகரெட்டுகளை சோதனை செய்வதற்கு அங்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் ஒரு பப்பை இழுத்து பார்ப்பது காணொளியில் அம்பலமாகியுள்ளது.

இதன்படி அவர் ஒருநாளைக்கு 8000-10000 வரையிலான வேப்ஸ்களை பரிசோதனை செய்து பார்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version