Site icon Tamil News

இலங்கையை விட்டு வெளியேறவுள்ள வைத்தியர்கள்!

மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த மற்றுமொரு மருத்துவர்கள் குழு எதிர்வரும் மாதங்களில் விசேட பயிற்சிக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மருத்துவ பட்டப்படிப்பை முடித்த சுமார் 785 வைத்தியர்கள் எதிர்வரும் மாதங்களில் விசேட பயிற்சிக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக தற்போது வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற வைத்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை பற்றிய அச்சம் எழுந்துள்ளது.

நாட்டில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை தக்கவைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றதுடன், இது தொடர்பில் சிரேஷ்ட வைத்தியர்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகளுடன் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

எவ்வாறாயினும், பயிற்சிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (26.08) கூறினார்.

Exit mobile version