Site icon Tamil News

போராட்டத்தில் இறங்கும் வைத்தியர்கள் : சேவைகள் ஸ்தம்பிக்குமா?

நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

07 கோரிக்கைகைளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று (22.09) பிற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு சுகாதார ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், சிவில் மத மற்றும் வர்த்தக அமைப்புகளும் ஆதரவளிக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை, சுகாதார ஊழியர் பற்றாக்குறை, தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்தல், சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமை, அதிவேக மனநலம் குன்றிய பிள்ளைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் மருந்துகளை வழங்காமை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version