Tamil News

காலை உணவை தவிர்ப்பவாரா நீங்கள்? அப்போ கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

தற்போது மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களில் இருந்து உடலை காப்பது மிகவும் முக்கியமானது. முன்னோர்கள் சத்தான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் நமக்கு கொடுத்தனர். ஆனால் இந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. அதனால் தற்போதைய தலைமுறையினருக்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் குறைந்துள்ளது.

தற்போதைய தலைமுறையினர் போதுமான அளவிற்கு நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதற்கு காரணம் உணவு பொருட்கள் அனைத்தும் கலப்படமாக மாறிவருவதும் ஒரு காரணம் ஆகும். விரும்பியதை உண்கின்றோம் என்ற பெயரில் துரித உணவுகளையும், அடைக்கப்பட்ட பேக்கட் உணவுகளையும் எடுத்துக்கொள்வதால் தேவையில்லாத உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல், சரியான நேரத்தில் தூக்கம் இல்லாமல் இருப்பதும் ஆகும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக காலை சிற்றுண்டியை எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்கின்றனர். இதனால் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால் அல்சர் உருவாக வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோய் வருவதற்கும் உணவு பழக்கவழக்கத்தில் மாறுபாடு இருந்தால் கட்டாயம் டைப்-2 சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. மேலும் தேவையான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருந்தால் கட்டாயம் மன அழுத்தம் போன்றவை வர வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை காலை நேர உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் ஆகும்.

காலை உணவைத் தவிர்ப்பதால் உடலில் குளுக்கோஸ் வளர்ச்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சக்கரை நோய் உண்டாகும். அதன் பிறகு மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழும்.

சில மாதங்கள் கழித்து இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்பட்டு, சர்க்கரை நோயாளியாக மாற நேரிடும். காலை உணவை மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பில் உள்ள லைஸோசைம் (கிருமிநாசினி செய்கையுடையது), வாய்ப் பகுதியில் மையமிட்டுள்ள நுண்கிருமிகளை அழிக்கும். அதுவே உணவைச் சாப்பிடாவிட்டால், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்படும்.

மேலும், நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் முந்தைய நாள் இரவு முதல், அடுத்த நாள் மதியம் வரை நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் நடக்கும் அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்படும்.

காலையில் சாப்பிடாமல் தவிர்க்கும்போது, செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காது. உணவின் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் சோர்வான நிலையை உடல் அடையும்.

சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரித்து அறிவாற்றலும் குறையும்.

 

Exit mobile version