Tamil News

கல்கி படத்தால் புலம்பும் விநியோகஸ்தர்கள்? 1000 கோடிக்கு ஆப்பா?

பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி திரைப்படத்தால் விநியோகஸ்தர்கள் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் சலார் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக ரிசல்ட்டை கொடுத்தது.

கல்கி 2898 ஏடி படத்தையும் தோல்வியாக கொடுத்து ஹாட்ரிக் தோல்வியை பெற்றுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் பிரபாஸ்.

படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது. மேலும் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி என பான் இந்தியா ஸ்டார்களையும் கமிட் செய்தார்கள்.

ஆந்திரா, தெலங்கானாவின் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. அங்கு படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன.

ஆனால் தமிழ்நாட்டில் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. முக்கியமாக கமல் ஹாசன், அமிதாப் பச்சனை எல்லாம் படத்தில் நடிக்க வைத்து வேஸ்ட் ஆக்கிவிட்டார்கள் என்றும் ஓபனாக கூறினர். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட் ஆனதாகவே கூறப்படுகிறது.

இதேபோல்தான் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்துக்கு நிகழ்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கல்கி படம் ஒர்க் அவுட்டாகாமல் போனதற்கு அதன் கதையும், மேக்கிங்கும்தான் காரணம் என்று கருதப்படுகிறது.

கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் படம் இதுவரை 1000 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் படம் பற்றி இன்னொரு தகவலும் உலாவிக்கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் படத்தால் தங்களுக்கு ஒரு பைசாகூட லாபம் இல்லை என்றும்; போட்ட முதலை மட்டும்தான் எடுத்திருக்கிறோம்; இதில் அந்தப் படம் 1000 கோடி ரூபாய் வசூலித்தால் என்ன என்று அவர்கள் புலம்பிவருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Exit mobile version