Tamil News

பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி திருகோணமலையில் துண்டு பிரசுரம் விநியோகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக்கோரி திருகோணமலையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தலைமையில் உத்தியோகபூர்வமாக விநியோகிக்கப்பட்டது.

எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த ஹர்த்தாலுக்கு இலங்கைத் தமிழரசு கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்க உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Exit mobile version