Site icon Tamil News

ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதம் – புதினை சந்திக்கவுள்ள அதிபர் கிம் !

வடகொரிய அதிபர் கிம் ஜாங் இம்மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

வடகொரிய அதிபர் கிம் , ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டு விளாதிவோஸ்டாக் என்ற பசிபிக் கடலோர நகரில் புதினை சந்திக்க உள்ளார்.

இதன்போது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களைத் தருமாறு கிம்ஜாங்கிடம் புதின் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஷய – உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

உக்ரைன் -ரஷ்யா இடையே போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் வட கொரியா அதிக ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று அமெரிக்கா முன்பு எச்சரித்து இருந்தது.

அதேவேளை வடகொரியா அண்மையில் அணு ஆயுத ஒத்திகை நடத்தி வானில் உள்ள ஏவுகணைகளை அழிப்பது போன்ற தத்ரூப காட்சிகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version