Site icon Tamil News

டாரஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

டாரஸ் ஏவுகணைகளின் சாத்தியமான பயன்பாடு உட்பட உக்ரைனுக்கான ஆதரவு குறித்து ஜேர்மன் இராணுவ அதிகாரிகள் விவாதித்ததாகக் கூறப்படும் ஆடியோ பதிவு ரஷ்யாவில் வெளியிடப்பட்டமை தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இது ஒரு “மிகவும் தீவிரமான விஷயம்” என்றும், ஜேர்மன் அதிகாரிகள் “மிகக் கவனமாகவும், மிகத் தீவிரமாகவும், மிக விரைவாகவும்” இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருட போருக்குப் பிறகு உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்ததாலும், அமெரிக்காவின் இராணுவ உதவி நிறுத்தப்பட்டுள்ளதாலும் உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்குவது தொடர்பில் ஜேர்மன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில் டாரஸ் நீண்ட தூர கப்பல் ஏவுகணைகளை உக்ரைன் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற கேள்வியை இராணுவ அதிகாரிகள் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  ஷோல்ஸ், டாரஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பத் தயங்குவதாகக் கூறினார், ஜெர்மனி நேரடியாகப் போரில் ஈடுபடும் அபாயத்தைச் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version