Site icon Tamil News

கணேமுல்ல சஞ்சீவவின் ஆயுதக் களஞ்சியம் கண்டுப்பிடிப்பு!

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

02 கைக்குண்டுகள், மைக்ரோ ரக துப்பாக்கி, ரிவால்வர் மற்றும் 43 டி-56 தோட்டாக்கள் ஆகியவை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றக் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார அல்லது கணேமுல்ல சஞ்சீவ தற்போது 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version