Site icon Tamil News

சீனாவுக்கு பேரிடி!!! பிலிப்பைன்ஸுக்கு ஏவுகணைகளை வழங்கியது இந்தியா

375 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் வழங்குவது தொடரும் என்று இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி, ஏவுகணை அமைப்பு விநியோகம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் இருந்து மணிலாவில் உள்ள விமான தளத்தை இலியுஷின்-76 போக்குவரத்து விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முதல் பகுதியாக நேற்று பிலிப்பைன்ஸ் ஏவுகணைகளை பெற்றுக்கொண்டது.

2022 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 19 அன்று பிலிப்பைன்ஸுக்கு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதி விநியோகத்தை இந்தியா உறுதிப்படுத்தியது.

தென்சீனக் கடலில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு பிலிப்பைன்ஸுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிலிப்பைன்ஸ் ஏவுகணைகளை வழங்கியுள்ளது.

இந்த ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் தங்கள் கரையோரப் பகுதிகளில் பயன்படுத்தி, பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version