Tamil News

அம்பானி வீட்டுக்குள்ளேயே நுழைந்தார் அட்லீ

ஜவான் படம் ஹிட்டடித்ததை அடுத்து இயக்குநர் அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் அம்பானி வீட்டுக்கு சென்றார்.

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படமே மெகா ஹிட்டாகி நூறு நாட்கள் ஓடியது. படத்தின் மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கிறது என்று பேசப்பட்டது.

இதனையடுத்து அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் பிகிலை தவிர்த்து தெறியும், மெர்சலும் மெகா ஹிட்டாகின.

பல விமர்சனங்களை சந்தித்தாலும் அட்லீ தற்போது ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்து ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படம் இதுவரை 880 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.

ஜவான் படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் அட்லீக்கு அடுத்தடுத்து ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பூஜையை முன்னிட்டு அட்லீ அவரது மனைவி ப்ரியா ஆகியோ முகேஷ் அம்பானி வீட்டுக்கு சென்றனர்.

 

Exit mobile version