Site icon Tamil News

வூஹானின் ஆய்வகத்தில் இருந்து கொவிட் பரவியதா : அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை!

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்தே கொவிட் தொற்று பரவியது என்பதற்கான நேரடி ஆதாரம் இல்லை என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து அமெரிக்க உளவுத்துறை நான்கு பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,  சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து கோவிட்-19 தொற்றுநோய் உருவானது என்பதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மத்திய புலனாய்வு ஏஜென்சி மற்றும் மற்றொரு நிறுவனத்தால் கோவிட்-19 தொற்றுநோயின் துல்லியமான தோற்றத்தை கண்டறிய முடியவில்லை, என்றும் ஆய்வுகளில் முரண்பட்ட சவால்களை எதிர்நோக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

வுஹான் இன்ஸ்டிடியூட்டில் (WIV) கொரோனா வைரஸ்களில் “விரிவான பணிகள்” நடத்தப்பட்டாலும், வெடிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று ஏஜென்சிகள் தெரிவித்தன.

தொற்றுநோய்க்கு முன்னர் WIV பணியாளர்கள் சார்ஸ்கொவிட் 2 சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version