Site icon Tamil News

டயனா கமகேவின் மனு குறித்த வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து  உத்தரவிடுமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால், அவருடைய உறுப்புரிமை இரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரி ஓஷல ஹேரத் என்ற சமூக ஆர்வலர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி  தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனவும், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக ஆணை பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று (25.07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,  இந்த வழக்கை முழு பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 14-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version