Tamil News

D 50 ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வருகின்றது… வெளியான புதிய அப்டேட்

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது. கேப்டன் மில்லரை தொடந்து தனுஷ் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார்.

D 50 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை தனுஷ் இயக்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், D 50 படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என இயக்குநர் சுப்ரமணிய சிவா அப்டேட் கொடுத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் D 50 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

D 50 படப்பிடிப்பை குறுகிய நாட்களில் முடித்துவிட தனுஷ் பிளான் செய்துள்ளாராம். அதன்படி, தற்போது D 50 ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

D 50 படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. சில நாட்கள் முன்னதாக D 50 படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் மொட்டை தலையுடன் இருக்கும் போட்டோ வெளியாகி வைரலானது.

 

Exit mobile version