Site icon Tamil News

“பூ” நடிகையுடன் சிவகார்த்திகேயனுக்கு காதலா? தனுஷ் போட்ட பட்டாசு

திறமையாளர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்குவதில் நடிகர் தனுஷ் கெட்டிக்காரர். அந்த வரிசையில் மிகவும் முக்கியனவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயனை வெள்ளித்திரையில் ஜொலிக்க வைத்தது தனுஷ் தான்.

தனது 3 படத்தில் சிவாவை காமெடியனாக நடிக்க வைத்த தனுஷ், அதன்பின்னர் அவரை தன்னுடைய தயாரிப்பில் ஹீரோவாகவும் நடிக்க வைத்து அழகுபார்த்தார். அப்படி தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று எஸ்.கே.வுக்கு மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.

அதன்பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து இன்று டாப் ஹீரோவாக வலம் வருகிறார் சிவா.

தற்போதைய நிலவரப்படி தனுஷை விட சற்று கூடுதலாகவே சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், இயக்குனர் வினோத் ராஜை அறிமுகப்படுத்தி பேசுகையில்,

மற்றவர்களைபோல் நான் தான் இவங்கள அறிமுகம் செய்தேன் என போற இடமெல்லாம் சொல்லிக்காட்ட மாட்டேன் என கூறி இருந்தார். தனக்கு அதுபோல நடந்ததாகவும் அவர் சொல்லி இருந்தார். இதன்மூலம் தனுஷை தான் அவர் குத்திக்காட்டி பேசி இருக்கிறார் என சர்ச்சை வெடித்தது.

இந்த சர்ச்சை ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, சிவகார்த்திகேயன் பற்றி தனுஷ் காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் சொன்ன கிசுகிசு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் தொகுப்பாளினி டிடியிடம், மரியான் படத்தில் சிவகார்த்திகேயனை பற்றி நான் ஒரு கிசுகிசு சொல்லி இருப்பேன் அதை நீங்க கவனிச்சீங்களா என்று கேட்பார். அதற்கு டிடி அப்படியா அதை கவனிக்கவில்லையே, அது என்னனு சொல்லுங்க என கேட்க தனுஷும் அந்த கிசுகிசுவை கூறி இருக்கிறார்.

மரியான் படத்தில் தந்தை பெயரும், மகன் பெயரும் கொண்ட நடிகருடன் பூ நடிகை காதலா என்று தான் பேசிய வசனம் சிவகார்த்திகேயனை பற்றியது தான் என கூறினார் தனுஷ்.

அவர் அந்த கிசுகிசுவை டிடியிடம் சொன்னபோது நடிகர் சிவகார்த்திகேயனும் அருகில் இருந்தார். தந்தை பெயரும், மகன் பெயரும் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தான் என தனுஷ் சொன்னாலும், அந்த பூ நடிகை யார் என்பதை கூறவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அது மரியான் படத்தில் உங்களுக்கு ஜோடியாக நடித்த பார்வதி தான என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Exit mobile version