Tamil News

தவிக்க விடும் தனுஷ்… போயஸ் கார்டன் வீட்டு மர்மம் உடைந்தது

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியதில் இருந்தே அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் பங்கேற்க போயஸ் கார்டன் வீடு கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அந்த வீட்டின் கிரக பிரவேசத்தின் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தே விட்டனர்.

நடிகர் தனுஷ் பற்றி சுசித்ரா அளித்த பேட்டிகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பின. ஆனால், அதையும் தாண்டி தனுஷை ரொம்பவே பாதித்தது அந்த போயஸ் கார்டன் வீடு தான்.

அதனால் தான் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போயஸ் கார்டனில் நானெல்லாம் வீடு கட்டக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி போயஸ் கார்டனில் வீடு கட்டும் ஆசை எப்படி வந்தது என்பதற்கும் ஒரு கதை சொல்லியிருந்தார்.

இந்நிலையில், மறுபடியும் சினிமா வட்டாரத்தில் தனுஷின் போயஸ் கார்டன் வீடு தொடர்பான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

செய்யாறு பாலு, காந்தராஜ் உள்ளிட்ட பலர் இதுதொடர்பாக பேட்டிகளில் பேசி வருகின்றனர்.

பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய தனுஷ் அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் தெலுங்கில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார் என்றும் மேலும், சில பெரிய பேனர்களில் மட்டும் நடித்து வருகிறார் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தை சில தயாரிப்பாளர்கள் முற்றுகையிட்ட நிலையில் தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் ஒன்றை விட்டது. அதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டியுள்ள பங்களா தயாரிப்பாளர்களின் பணத்தில் கட்டியது தான் என்றும் அந்த தயாரிப்பாளர்களை தனுஷ் ஏமாற்றலாமா? என்றும் காந்தராஜ் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மூத்த பத்திரிகையாளர்களான செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் தனுஷின் போயஸ் கார்டன் வீடு கட்ட காரணமாக இருந்த தயாரிப்பாளர்களை தனுஷ் தவிக்க விடுவது நியாயமான செயல் அல்ல என்றும் கூறியுள்ளனர்.

படங்களை தயாரிக்க வட்டிக்கு பணம் வாங்கி கோடிக் கணக்கில் நடிகருக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு, கால தாமதம் ஆகும் சூழலில் தயாரிப்பாளர்கள் தான் வட்டிக்கு மேல் வட்டி கட்டி வருகின்றனர் என்றும் கூறுகின்றனர். முன்னணி நடிகர்களே இப்படி தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்துக் கொள்ளாமல் செயல்படுவது சினிமாவுக்கு அழகு இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன.

Exit mobile version