Tamil News

பாலிவுட்டில் தனுசுக்கு ஜோடியாகும் “அந்த” படத்தின் சர்ச்சை நாயகி..

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவருடைய ஐம்பதாவது படமான ராயன் வரும் 26 ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

இதற்கான பிரமோஷன் பணிகள் தற்போது சூடு பிடித்து வரும் நிலையில் தனுஷ் குபேரா படத்தில் பிஸியாக இருக்கிறார்.

நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் இப்படத்திற்கு பிறகு அவர் பாலிவுட் பறக்க இருக்கிறார்.

ஏற்கனவே இவர் சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அத்ரங்கி ரே வெளிவந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அவர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடிக்கிறார்.

இதற்கான அறிவிப்பு வீடியோ கடந்த வருடம் வெளிவந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. மேலும் இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக அனிமல் பட நாயகி திரிப்தி டிம்ரி நடிக்கிறார்.

முழுக்க முழுக்க காதல் கதையான இப்படத்தில் இவர்களின் ஜோடி பொருத்தம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version