Site icon Tamil News

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர ஒருவருக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவா் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தபோது, இலங்கை அரசினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச காவல்துறையினாினால் கைது செய்யப்பட்டு, நாடுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தியதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தொிவித்திருந்தனா்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் படையினருக்கு தகவல்களை வழங்கிய நபர்களை கொலைச் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபர் தொடா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட செல்வபாக்கியம் சுதாகரன், 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் செய்றுள்ளாா் .

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண பிரபல தலைவரான “இலங்கீத் மாஸ்டர்” என்பவரு​டன் இவர் தப்பிச் சென்றுள்ளார் என்பதும் விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version