Tamil News

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் உள்ள கண்டல் தாவரங்கள் அழிப்பு

திருகோணமலை- கண்டி பிரதான வீதி மட்டிக்களி கலப்பு பகுதியில் கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவதை சமூக அபிவிருத்தி கட்சி மற்றும் பொதுமக்கள் எதிர்த்துள்ளனர்.

திருகோணமலை நகர சபை தீயணைப்பு படை வீரர்களும்,நகர சபை ஊழியர்களும் கண்டல் தாவரங்களை வெட்டி சேதப் படுத்தியுள்ளனர்.

குறித்த மரங்களை வெட்ட வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் குகதாசன் ஆகியோர் கோரிக்கை விடுத்ததை அடுத்து கிழக்கு மாகாண செந்தில் தொண்டமான் வீதியினூடாக செல்லும்போது கடல் விளங்குவதிலை என கூறி குறித்த மரங்களை வெட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மரம் வெட்டுவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆளுநர் இவ்வாறான விடயங்களை சொல்லவில்லை எனவும் உறுதியளித்தனர்.ஆனாலும் இதுகுறித்து சமூக அபிவிருத்திக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் குகதாஸ் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Exit mobile version