Site icon Tamil News

ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்!

ஐரோப்பா முழுவதும் டெங்கு தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பிரான்ஸில் 600 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதை அடுத்து, இங்கிலாந்தில் டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

காலநிலை மாற்றம் வெப்பநிலையை உயர்த்தியதால் ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு கொசுக்கள் அதிகளவில் பரவி வருவதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் கூறியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், டெங்கு தொற்றின் அதிகரிப்பானது அதிகாரிகளை கவலையடைய வைத்துள்ளது.

குறிப்பாக வெப்பமண்டல காலப்பகுதியில் அதிகளவில் பரவி வரும் இந்த கொசுக்களால் குரோஷியா, ஜெர்மனி, ஆஸ்திரியா, பல்கேரியா, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, மால்டா, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 13 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version