Site icon Tamil News

இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இதன்போது அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கையில் தங்களின் தமிழ் சமூகத்துக்கு உரிமை இல்லை என்றும், அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இலங்கை போர்க்குற்றம் இழைத்த நாடு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனவும், இலங்கையின் தற்போதைய அரச தலைவரை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Exit mobile version