Site icon Tamil News

ஜெர்மனியில் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை

ஜெர்மனியில் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தின் அடிப்படையில் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் சம்பள உயர்வு அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அடுத்த வருடம் முதல் 11.81 யூரோவாக அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

பண வீக்கம் குறைவடைந்துள்ள காரணத்தினால் பொருட்களை கொள்வனவு செய்யும் திறன் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பரிந்துரையை வழங்கும் குழுவின் அறிவுரைக்கு அமைய சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும் அடுத்த வருடம் முதல் அடிப்படை சம்பளத்தை 14 யூரோவாக அதிகரிக்க வேண்டும் என நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனாலும் தற்போதைய நிலையில் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு அரசாங்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் சில தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அண்மையில் கரிசனை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version