Site icon Tamil News

ஜெர்மனியில் உள்ள நான்கு ரஷ்ய தூதரகங்களை மூடுமாறு வலியுறுத்தல்!

ஜேர்மனியில் உள்ள ஐந்து தூதரகங்களில் நான்கு தூதரகங்களை மூடுமாறு ரஷ்யாவிடம் கூறியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோபர் பர்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் உள்ள ஜேர்மன் தூதரகம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை மாஸ்கோ நிர்ணயித்ததை அடுத்து ஜேர்மனி மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே “பணியாளர்கள் மற்றும் கட்டமைப்புகளின் சமநிலையை” உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

முன்னதாக கலாசார அமைப்புகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் உட்பட 350 ஜெர்மன் அரசு அதிகாரிகள் அதிகபட்சமாக ரஷ்யாவில் இருக்க முடியும் என்று ரஷ்ய அரசாங்கம் சமீபத்தில் கூறியிருந்தது.

அதேநேரம்  நவம்பர் மாதத்திற்குள் யெகாடெரின்பர்க், நோவோசிபிர்ஸ்க் மற்றும் கலினின்கிராட்டில் உள்ள அதன் தூதரகங்களை ஜெர்மனி மூட வேண்டும் என்று பர்கர் கூறியிருந்தார்.

ரஷ்யாவின் குறித்த நடவடிக்கைகளுக்கு பதிலடிக்கொடுக்கும் வகையில் ஜெர்மனி மேற்படி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version