Site icon Tamil News

துபாயின் முக்கிய துறைமுக நகரத்தின் இலாபத்தில் சரிவு!

துபாயை தளமாகக் கொண்ட துறைமுக ஆபரேட்டர் DP வேர்ல்டின் இலபமானது 60 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் நடந்து வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக உள்ளது.

DP வேர்ல்ட் இந்த ஆண்டு $265 மில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் $651 மில்லியனாக இருந்துள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது செங்கடல் வழித்தடத்தின் வழியாக ஹூதிகள் நவம்பர் மாதம் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தின் வழியாக ஆண்டுதோறும் பாயும் $1 டிரில்லியன் பொருட்களை சீர்குலைத்துள்ளன.

Exit mobile version