Site icon Tamil News

கொடிய பறவைக் காய்ச்சல் வைரஸ் – தீவிர அவதானத்தில் ஆஸ்திரேலியா

உலகளவில் மில்லியன் கணக்கான விலங்குகளைக் கொன்ற H5N1 பறவைக் காய்ச்சலின் அழிவுகரமான திரிபு, முதல் முறையாக அண்டார்டிகாவின் பிரதான நிலப்பகுதிக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய் உலகளவில் மில்லியன் கணக்கான பறவைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பாலூட்டிகளை கொல்லக்கூடிய ஒரு வைரஸ் என்று கூறப்படுகிறது.

இந்த நோய் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விலங்கு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிக அளவில் தொற்றக்கூடிய இந்த வைரஸின் புதிய திரிபு, மீன், சிறிய பாலூட்டிகள் மற்றும் பெங்குவின் குட்டிகள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அதே சமயம் பெரிய கடல் பறவைகளையும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் உள்ள தீவுகளில் இந்த பறவைக் காய்ச்சல் முன்னர் அடையாளம் காணப்பட்டாலும், இது முதல் நிலத்தைக் கண்டறிதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2022 இல் இது தொடர்பான வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டது, அதன் பின்னர் கடந்த நவம்பர் வரை தென் அமெரிக்காவில் சுமார் 600,000 பறவைகள் இறந்துள்ளன.

ஆஸ்திரேலிய அண்டார்டிக் பிரிவின் கடல் பறவையியல் நிபுணர் டாக்டர் லூயிஸ் எமர்சன் ப்ரைமவேரா, மேற்கு அண்டார்டிகாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு உள்ள தூரம் நாட்டில் பறவைக் காய்ச்சல் வருவதைக் குறைக்கும் என்றார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version