Site icon Tamil News

தமிழக மீனவரின் சடலம் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பித்ரா கப்பலில் ஒப்படைத்தனர். உடலை பெற்று கொண்ட கடற்படை வீரர்கள் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திற்கு எடுத்து வந்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மலைச்சாமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது.

நடுக்கடலில் திடீரென வந்த இலங்கை கடற்படை ரோந்து படகு மீன்பிடி படகின் மீது மோதியதில் இரண்டு நிமிடத்தில் படகு மூழ்கியதாகவும், படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதாகவும், கடலில் காணாமல் போன மீனவர் ராமசந்திரனை இலங்கை கடற்படை தேடி வருவதாக உயிர் பிழைத்து வந்த மீனவர் தெரிவித்தார்.

மேலும் தங்களை இலங்கை கடற்படை உள்ளாடைகளுடன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று உணவு கூட கொடுக்காமல் பல மணி நேரம் விசாரித்து பின்னர் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைத்ததாக உயிர் பிழைத்து மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யாழ்பாணத்தில் உள்ள துணை தூதரக அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி தங்களை பத்திரமாக தாயகம் அனுப்பி வைத்ததாக மீனவர்கள் இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்த கொண்டனர்.

Exit mobile version