Site icon Tamil News

சிங்கப்பூர் முழுதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் சிக்கிய ஆபத்தான பொருட்கள்

சிங்கப்பூர் முழுதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன் போது 350,000க்கும் அதிகமான மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் மதிப்பு 6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகும். மின்-சிகரெட்டுகள் Telegram செயலியில் விற்பனைக்கு விடப்பட்டிருந்ததாகச் சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் செயல்பட்ட மிகப் பெரிய மின்-சிகரெட் விநியோகக் கட்டமைப்புகளில் அதுவும் ஒன்றாகும்.

சென்ற மாதம் 14ஆம் திகதிக்கும் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் உட்லண்ட்ஸ் லூப், உட்லண்ட்ஸ் தொழிலியல் பூங்கா போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கிடங்குகள் சிலவற்றிலும் கூட்டுரிமை வீடுகள் சிலவற்றிலும் மின்-சிகரெட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

34 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட 4 பேர் விசாரணையில் ஒத்துழைக்கின்றனர். அவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்களாகும்.

இவ்வாண்டு ஜனவரியிலிருந்து சிங்கப்பூரில் 18 மில்லியன் வெள்ளிக்கும் மேல் பெறுமானமுடைய மின்- சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Exit mobile version