Site icon Tamil News

10 லட்சம் மக்களுக்கு ஆபத்து – இஸ்ரேல் ராணுவத்துக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

காஸாவின் ரஃபா நகரில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பொதுமக்கள் பலர் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவும், ஐ.நா-வும் எச்சரித்துள்ளன.

அங்கு இஸ்ரேல் அரசு மேற்கொள்ள இருக்கும் எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்கும் துணை நிற்க மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஃபா தவிர மற்ற அனைத்து பாலஸ்தீன நகரங்களுக்குள்ளும் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதுது.

இந்த நிலையில், பிரதமர் நேதன்யாஹூவின் உத்தரவுக்கு இணங்க ரஃபா நகரம் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

Exit mobile version