Site icon Tamil News

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து – அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்

ஜெர்மனி நாட்டில் சிரியா நாட்டவர்கள் அதிகளவில் வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் அண்மை காலங்களாக சிரியா நாட்டை சேர்ந்த அகதிகள் குழு நிலை குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.

இதுவரை காலங்களும் இவ்வாறு குழு நிலை குற்றவியல் சம்பவங்களில் கூடுதலாக லெபபனான் நாட்டை சேர்ந்தவர்கள் ஈடுப்பட்டிருந்துள்ளனர்.

அண்மை காலங்களாக சிரியா நாட்டை சேர்ந்த அகதிகளும் இவ்வகையான செயற்பாடுகளில் ஈடுப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஒகஸ்ட் மாதம் எஸன் நகரத்தில் இவ்வகையான குழு நிலை சண்டை ஒன்றை சிரியா நாட்டை சேர்ந்த அகதிகளும் மற்றும் லெபனான் நாட்டை சேர்ந்த அகதிகளுக்கும் இடையே ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில் முல்லைம் நகர மத்தியில் சிரியா நாட்டை சேர்ந்த 2 குழுக்களிடையே பாரிய மோதல் இடம்பெற்றுள்ளதக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டதாகவும், பாதசாரிகள் இதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ள நிலையில் பொலிஸார் குறித்த பிரதேசத்தை முற்றுகையிட்டடதாகவும் தெரியவந்து இருக்கின்றது.

பின்னர் 40 வயதுடைய நபரானவர் பலத்த தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version