Site icon Tamil News

ஐரோப்பாவுக்கு காத்திருக்கும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஐரோப்பாவில் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் இந்த மாற்றங்கள் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஆண்டு கோடைக்காலத்தின்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை கூடியது.

கண்டங்களிலேயே ஐரோப்பா கண்டம் விரைவாகச் சூடுபிடிக்கக் கூடியது என்று செய்தி அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

இவ்வாண்டு முழுதும் அங்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வறட்சி மோசமாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியமும் உலக வானிலை அமைப்பும் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு சுமார் 16,000 பேர் கடும் வெப்பத்திற்குப் பலியாகினர். உயரும் வெப்பநிலையால் பொருளியலும் பல்லுயிர்ச் சூழலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

குறைந்தது 98 சதவீதம் பொருளியல் பாதிப்பு, வறட்சியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. நீர்மட்டம் வடிவதால் பிரான்சின் சில பகுதிகளில் வடிகால் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் தானியங்கள், திராட்சை அறுவடையை வறட்சியான சூழல் பாதித்தது. அந்த வட்டாரத்தில் காட்டுத் தீ பிரச்சினையும் மோசமாகியிருக்கிறது.

Exit mobile version