Site icon Tamil News

திபெத்தியர்களின் பிரச்சினைகள் குறித்து பேச தலாய்லாமா விருப்பம்!

திபெத்தியர்களின் பிரச்சனைகள் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் லடாக் பயணத்திற்கு முன் தரம்ஷாலாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”நான் எப்போதும் பேசுவதற்குத் தயாராக இருக்கிறேன். திபெத்திய மக்களின் மனப்பான்மை மிகவும் வலுவானது என்பதை இப்போது சீனாவும் உணர்ந்துள்ளது.

எனவே, திபெத்திய பிரச்சனைகளைச் சமாளிக்க அவர்கள் என்னைத் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள். நானும் தயாராக இருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

சீனாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, தலாய் லாமா, “நாங்கள் சுதந்திரத்தை நாடவில்லை, பல ஆண்டுகளாக நாங்கள் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

சீன, அதிகாரப்பூர்வமாக அல்லது அதிகாரப்பூர்வமற்ற முறையில் என்னை தொடர்பு கொள்ள விரும்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

“நான் திபெத்தில் பிறந்தேன், இந்த பெயரை நான் தலாய் லாமா வைத்திருக்கிறேன், ஆனால் திபெத்தின் நலனுக்காக பாடுபடுவதுடன், அனைத்து உணர்வுள்ள உயிரினங்களின் நலனுக்காகவும் பாடுபட்டு வருகிறேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version