Site icon Tamil News

CWC – இங்கிலாந்தை இலகுவாக வீழ்த்திய இலங்கை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வந்த இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்மூலம், இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. இதில், டேவிட் மலான் 28 ரன்கள், ஜோ ரூட் 3 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள், ஜோஸ் பட்லர் 8 ரன்கள், லிவிங்ஸ்டன் ஒரு ரன், மொயீன் அலி 15 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், அதில் ரஷித் 2 ரன்கள், மார்க் வுட் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.

இதில், கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி முதல் 17 ஓவர்களிலே 5 விக்கெட்டுகளை இழந்தது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 33.2 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், 157 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் இலங்கை களமிறங்கியது.

இதில், இலங்கை வீரர்களான பதும் நிசன்கா அரை சதம் கடந்து 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதேபோல், சதீரா சமரவிக்ரமா 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதற்கிடையே, குசல் பெரேரா 4 ரன்களும், குசல் மெண்டிஸ் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில், இலங்கை அணி 25.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்து அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

Exit mobile version