Site icon Tamil News

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் – தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கை

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் இருக்காதென நம்புவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குகளை என்னும் பணியில் எந்த தலையீடும் இருக்காத வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் செயற்படவேண்டும் என்பதுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பென்றும் தேசிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என்றும் நம்புகிறோம்.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பொது அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டுமே செய்யப்படுவதாக நாங்கள் நம்புகிறோம் என மக்கள் சக்தி விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version