Site icon Tamil News

ராஜஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு பகுதியில் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் வெடித்ததை அடுத்து, ஐந்து காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜோத்பூர் ஏடிசிபி நிஷாந்த் பரத்வாஜ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,”நேற்று ஜூன் 21ம் தேதி இரு சமூகத்தினருக்கு இடையே வகுப்புவாத கலவரம் வெடித்தது. கல் வீச்சு நடந்தது, போலீஸ் மீதும் தாக்குதல் நடந்தது,நமது படைகள் அனைத்தையும் பயன்படுத்தி நிலைமை சீரானது. தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, போலீசார் மீது கல் வீசியதற்காகவும், கலவரத்தை பரப்பியதற்காகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் கேபினட் அமைச்சர் ஜோகராம் படேல், அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும், குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version