Site icon Tamil News

CrowdStrike செயலிழப்பு : பிரித்தானிய விமான நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

CrowdStrike செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமான நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று அதிகாரப்பூர்வ கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA) வெள்ளிக்கிழமையன்று (19.07) தொழில்துறை முதலாளிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியது.

குறித்த கடிதத்தில் இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியது

“அசாதாரண சூழ்நிலைகள்” என்று கருதப்படும் இந்த சூழ்நிலையில்  பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தை திருப்பி செலுத்த வேண்டிய அவசியமில்லை என விமான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் அடிப்படையில்  நிலையான தொகை இழப்பீட்டைப் பெற தகுதியற்றவர்கள் ஆகின்றார்கள்

நிறுவனத்தின் அறிவிப்பில் விமானத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் சில வகையான இடையூறுகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் பயங்கரவாதம், நாசவேலை, ஆபத்தான வானிலை மற்றும் நோய்வாய்ப்பட்ட அல்லது வேறு ஏதேனும் முக்கியமான காரணிகளுக்கே இவ்வாறு பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version