Site icon Tamil News

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு காத்திருக்கும் நெருக்கடி

சிங்கப்பூரில் இந்த ஆண்டு வெப்பநிலை மேலும் மோசமாகலாம் என வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

வருடாந்திரப் பருவநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட ஆய்வகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

சென்ற ஆண்டு நான்காவது முறையாகச் சிங்கப்பூரில் மிகக் கடுமையான வெப்பம் பதிவானது. 1997ஆம் ஆண்டுடிலும் 2015ஆம் ஆண்டிலும் அதே அளவு வெப்பம் பதிவானது.

ஆண்டு முழுதும் சராசரி வெப்பம் 28.2 டிகிரி செல்சியஸைத் தொட்டது. சென்ற ஆண்டு எல் நினோ பருவநிலை மாற்றம் ஏற்பட்டது.

அத்தகைய சூழலில் வருடாந்திர வெப்பம் அதிகரிப்பது வழக்கமாகும். வெப்பமண்டல பசிபிக் பகுதியில் எல் நினோ நீடித்தாலும் அது உலகின் பருவநிலையைப் பாதிக்கும்.

நீண்டகாலத்தில் உலகளாவிய பருவநிலை மாற்றம் இன்னமும் அக்கறைக்குரியதாக இருக்கிறது. வரும் மாதங்களில் வெப்பம் மிகுந்திருக்கும்; மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்;

வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்து, கோடையைச் சமாளிக்க அதிகமாகத் தண்ணீர் குடிக்கலாம், மெல்லிய ஆடைகளை அணியலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

Exit mobile version