Site icon Tamil News

கிரிக்கெட் உலக கோப்பைக்கான பரிசுத்தொகை அறிவிப்பு

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.

கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.

மேலும் இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.83 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 16.5 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version