Site icon Tamil News

COVID-19 தொற்று அதிகரிப்புக்கு மத்தியில் விழிப்புடன் இருக்க இந்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்து

நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த சனிக்கிழமை 24 மணி நேரத்தில் 6,155 புதிய தொற்றாளர்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு செப். 16ம் திகதிக்குப் பின்னர், தினசரி வழக்குகள் 6,000ஐ தாண்டியது இதுவே முதல் சந்தர்ப்பம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமை, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளூர் சுகாதார அதிகாரிகளுடன் கோவிட்-19 தொற்றுநோய் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

கோவிட்-19 தொற்றுநோயை சமாளிக்க மத்திய அரசும் மாநிலங்களும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று மாண்டவியா கூறினார். பரிசோதனை மற்றும் தடுப்பூசி முயற்சிகளை துரிதப்படுத்த அவர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து காய்ச்சல் மற்றும் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Exit mobile version