Site icon Tamil News

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம் – தடைப்பட்ட ரயில் சேவை

பிரான்ஸில் தண்டவாளம் அருகே இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து RER A ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தடைப்பட்ட குறித்த சேவை சில மணித்தியாலங்களின் பின்னரே வழமைக்குத் திரும்பியுள்ளது.

தண்டவாளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸார் உடனடியாக அழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. சடலம் அங்கிருந்து அகற்றும் வரை ரயில் நிலையங்களுக்கிடையே போக்குவரத்து தடைப்பட்டது.

போக்குவரத்து மாலை 5 மணியின் பின்னர் படிப்படியாக சீரடைந்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை வழங்கப்பட்டது.

Exit mobile version