Site icon Tamil News

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டத்தை சரிபார்ப்பது குறித்து கோப் குழுவில் விசாரணை!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அரச பல்கலைக்கழக முறைமையின் ஒழுங்குமுறை உரிமைகளை கையகப்படுத்தினால் அது இந்த நாட்டின் உயர்கல்வியின் முடிவாக அமையும் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

COP குழுவில் உண்மைகளை முன்வைக்கும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களின் தரத்தை சரிபார்க்கும் ஒழுங்குமுறை அதிகாரத்தை கல்வி அமைச்சு கையகப்படுத்தியதன் பின்னர், எந்தவொரு ஒழுங்குமுறையும் இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.

“பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அரச சார்பற்ற பல்கலைகழகத்தை ஆரம்பித்த போது, ​​அது ஒரு விரிவான விசாரணையை நடத்தி இறுதியாக அந்த நிறுவனங்களுக்கு இலங்கையில் பட்டம் வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஆனால் துரதிஷ்டவசமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து 2012 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு தெரியாமல் அமைச்சு அதனை அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் மூலம் பெற்றுக்கொண்டது.”

“இந்த 13 ஆண்டுகளுக்குள் பட்டங்களை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்த பிறகு, அது சரியாகச் செயல்படுகிறதா என்று பார்ப்பதற்கான ஒழுங்குமுறை இலங்கையில் பூஜ்ஜியமாக உள்ளது எனவும், அவர் கூறியுள்ளார்.

Exit mobile version