Site icon Tamil News

பிரான்ஸில் குடியேற்ற சட்டத்தால் சர்ச்சை – வீதிக்கு இறங்கிய மக்கள்

பிரான்ஸில் குடியேற்ற சட்ட சீர்திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சனிக்கிழமை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவணங்கள் அற்ற வெளிநாட்டவர்கள் இதில் பங்கேற்று, இந்த சீர்திருத்தத்துக்கு எதிராக குரல் எழுப்பினர்.

Elisabeth Borne பிரதமராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட குடியேற்ற சீர்திருத்தத்தினை பிரெஞ்சு அரசமைப்புச் சபை கடந்த ஜனவரி மாத இறுதியில் சில தணிக்கைகளுடன் ஏற்றுக்கொண்டிருந்தது.

குடியேற்றவாதிகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்த சட்டத்தினால் குடியேற்றவாதிகள் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“அரசமைப்புச் சபை பல தணிக்கைகளை செய்திருந்தது. அது மகிழ்ச்சியான விடயம் தான். ஆனால் ஒட்டுமொத்த சட்ட சீர்திருத்ததும் எங்களுக்கு எதிரானது. வெளிநாட்டவர்கள் பிரான்சின் பொருளாதார நலன்களின் பெரும் பங்கு வகிக்கின்றனர்.” என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பாரிசில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 3,400 ஆவணங்களற்ற வெளிநாட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version