Site icon Tamil News

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சதி!

58 ஆளில்லா விமானங்கள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை குழப்பும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உக்ரேனியப் படைகள் மற்றும் உக்ரேனிய சார்பு ரஷ்யர்களின் முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தலை சீர்குலைக்காவிட்டால், குடிமக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் இயல்பான செயல்பாட்டில் குறைந்தபட்சம் எப்படியாவது தலையிடுவதே முக்கிய குறிக்கோள், இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று புடின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version