Site icon Tamil News

நகைச்சுவை நடிகர் தங்கதுரை நெகிழ்ச்சி: அப்படி என்ன நடந்தது

அசத்தபோவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் தங்கதுரை.

பின்னர் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கிய தங்கதுரை முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது `லால்சலாம்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

இது குறித்து தங்கதுரை கூறுகையில், “சினிமாவில் மட்டுமே பார்த்து ரசித்த ரஜினியை இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்பேன் என்றும், அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்றும் எதிர் பார்க்கவில்லை.

ரஜினியுடன் நடித்தது என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக இருப்பதோடு சினிமாவுக்குள் வரவேண்டும் என்ற நோக்கத்தையும் நிறைவேற்றிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது” என கூறியுள்ளார்.

Exit mobile version