Site icon Tamil News

பெய்ஜிங்கில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட குளிரான வானிலை

72 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் டிசம்பர் மாதம் மிகவும் குளிரான வானிலை பதிவாகியுள்ளது.

1951ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெய்ஜிங்கில் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குளிர் காலநிலை சீனாவின் பல மாகாணங்களையும் பாதித்துள்ளதுடன், சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குளிர் காரணமாக சீனாவின் ஹெனான் மாகாணத்திலும் மின்சாரம் தடைபட்டுள்ளது.

சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் ஜூன் மாதம் சீனாவின் பெய்ஜிங்கில் 40 பாகை செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியிருந்த அதிக வெப்பநிலை காணப்பட்டது.

Exit mobile version